உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிடப்பில் போடப்பட்ட சாலை விரைந்து சீரமைக்க கோரிக்கை

கிடப்பில் போடப்பட்ட சாலை விரைந்து சீரமைக்க கோரிக்கை

ஆவடி:ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், 21வது வார்டு, டிரைவர்ஸ் காலனி ஏழாவது தெருவில், 15க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மத்திய அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது.அதன் பின், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டிய போது, சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால், பகுதிவாசிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். சாலை மண் தரையாக மாறியதால், புழுதி காற்றால் குழந்தைகள் மற்றும் முதியோர், வீடுகளுக்குள் முடங்கினர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்குப் பின் தார்ச்சாலை அமைத்துத் தருவதாக, வார்டு கவுன்சிலர் கூறியதாக தெரிகிறது. ஆனால், இதுவரை சாலை அமைக்கவில்லை.இந்நிலையில், சாலை பணிக்காக 'வெட் மிக்ஸ்' ஜல்லி கொட்டப்பட்டு, அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், கிடப்பில் உள்ள சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை