உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குவாரி நீர்த்தேக்கத்தில் கொட்டப்படும் குப்பையால் மேடவாக்கத்தில் சீரழிவு

குவாரி நீர்த்தேக்கத்தில் கொட்டப்படும் குப்பையால் மேடவாக்கத்தில் சீரழிவு

மேடவாக்கம், மேடவாக்கம் அம்பேத்கர் நகருக்கும், ஜல்லடியன்பேட்டை, நெசவாளர் நகருக்கும் மத்தியில், 25 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட கல்குவாரி நீர் தேக்கம் அமைந்துள்ளது.மழைக்காலங்களில், நீர்த்தேக்கத்தின் உபரி நீர் ஜல்லடியன்பேட்டை ஏரியில் கலக்கிறது. ஏரிக்கு செல்லும் போக்கு கால்வாயின் முகப்பிலேயே குப்பையை கொட்டுவதால், நீர் போக முடியாத நிலை உள்ளது.நீர்த்தேக்கத்தின் வடக்கில், மேடவாக்கம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கொட்டும் கிடங்கு உள்ளது. மேற்கில், இந்திரா காந்தி தெருவில் அமைந்துள்ள இறைச்சி கடைகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்நீர்த்தேக்கத்தை சுற்றி, 50,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கொட்டப்படும் இறைச்சி கழிவுகள், வீசப்படும் இறந்த விலங்குகளின் உடல்கள், ஊராட்சியின் சார்பில் கொட்டப்படும் குப்பையால், நாங்கள் அவதிக்குள்ளாகிறோம்.அருகில் உள்ள ஜல்லடியன்பேட்டை, மாநகராட்சியின் கீழ் வருவதால், தினமும் வீட்டிற்கே வந்து பேட்டரி வாகனங்கள் வாயிலாக குப்பை சேகரிக்கப்படுகிறது.ஆனால், ஊராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் வாகனம், வாரம் ஒருமுறை மட்டுமே வருகிறது. இதனால், பகுதிவாசிகள் இங்கேயே குப்பையை வீசி செல்கின்றனர்.இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. குப்பை கொட்ட எங்களுக்கு இவ்விடம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம், நீர்த்தேக்கத்தில் கொட்டப்படும் குப்பையை அகற்றி, சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ