பெரம்பூர்:வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ், 26; அதே பகுதியில், 'பாஸ்ட் புட்' கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, தன் மனைவி சுவலட்சுமியுடன், 'பல்சர்' பைக்கில் பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெரு வழியாக, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த தெருவைச் சேர்ந்த குமார், 48, என்பவர், வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அவர் மீது பைக் உரசியதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலானது.குமார், அவரது உறவினர், நண்பர்கள் சேர்ந்து, கோகுல்ராஜை கத்தி, கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதைப் பார்த்த சுவலட்சுமியின் அழைப்பின்பேரில், கோகுல்ராஜின் உறவினர் மற்றும் நண்பர்கள் அங்கு வந்தனர்.இரு தரப்பினரும் கட்டையால் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் கோகுல்ராஜ், அவரது உறவினர்கள் கெனித், 25, தினேஷ், 25, ஆனந்த், 19, பாலாஜி, 27, ஆகியோரும், குமார், அவரது மனைவி வேளாங்கண்ணி, 41, மகன் மனோஜ், 18, ஆகியோர் காயமடைந்தனர்.அவர்கள், பெரம்பூர் தனியார் மருத்துவமனை மற்றும் பெரியார் நகர் அரசு பொது மருத்துவமனைககளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த கோஷ்டி மோதல் வழக்கு தொடர்பாக, இரு தரப்பிலும் குமார், 48, லுாக்கா, 40, அவரது மகன் விதேஷ், 21, ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.