உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரேஷனில் 2வது மாதமாக பருப்பு தராததால் தவிப்பு

ரேஷனில் 2வது மாதமாக பருப்பு தராததால் தவிப்பு

சென்னை, ஆலந்துார், பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட பெரும்பாலான ரேஷன் கடைகளில் கடந்த மாதம் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வினியோகம் தடைபட்டது.நந்தம்பாக்கம் கிடங்கில் இருந்து சைதாப்பேட்டை, ஆதம்பாக்கம், ஆலந்துார், நங்கநல்லுார், உள்ளகரம், புழுதிவாக்கம், வாணுவம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளின் 348 ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை.தேர்தல் நடத்தை அமல் மற்றும் ஒப்பந்தம் காலாவதி ஆகிய காரணத்தால் அவற்றை கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உரிய அனுமதி பெற்று அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயில், பருப்பு வினியோகம் செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்படி, பாமாயில் மட்டும் இம்மாதம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், தொடர்ந்து இரண்டாவது மாதமாக துவரம் பருப்பு வினியோகம் செய்யப்படவில்லை.தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து துவரம் பருப்பு வாங்க வேண்டிய நிலை உள்ளது. ரேஷன் கடைகளில் 30 ரூபாயில் துவரம் பருப்பு வாங்கலாம் என்பதால், அவற்றை வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ