டிவிஷன் கிரிக்கெட் லீக் திருவல்லிக்கேணி வெற்றி விளையாட்டு செய்திகள்
சென்னை, டி.என்.ஏ.சி., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன. இதில், கிளப், அகாடமி உள்ளிட்ட ஏராளமான அணிகள் பங்கேற்றுள்ளன.நான்காவது டிவிஷன் 'சி' மண்டல போட்டியில், திருவல்லிக்கேணி எஸ்.சி., அணி, 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழந்து, 200 ரன்களை அடித்தது.அடுத்து களமிறங்கிய ராயப்பேட்டை சி.சி., அணி, 35.5 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 114 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இதனால், 86 ரன்கள் வித்தியாசத்தில் திருவல்லிக்கேணி அணி வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் வெங்கடேஸ்வரா சி.சி., அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து, 277 ரன்களை அடித்தது. அணியின் வீரர் பிரசன் குமார் 105 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 113 ரன்களை அடித்தார்.அடுத்து பேட்டிங் செய்த, காந்தி நகர் சி.சி., அணி, 39.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 176 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. எதிர் அணியின் வீரர் ஷியாம் சுந்தர் ஐந்து விக்கெட் எடுத்து, 58 ரன்களை கொடுத்தார்.வெங்கட் சி.சி., அணி, 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஏழு விக்கெட் இழந்து, 240 ரன்களை அடித்தது. எதிர்த்து விளையாடிய, ஹர்நாத் சி.சி., அணியும் 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஆறு விக்கெட் இழந்து, 239 ரன்களை அடித்து, போராடி தோல்வியடைந்தது.