உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மீது கார் மோதி ஓட்டுநர் படுகாயம்

லாரி மீது கார் மோதி ஓட்டுநர் படுகாயம்

வேளச்சேரி, வேளச்சேரி - தரமணி சாலை, டான்சி நகர் சந்திப்பில், நேற்று அதிகாலை, ஒரு குப்பை லாரி திரும்பியது. அப்போது, எதிரே வாகனங்கள் வந்ததால், லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார்.அதேநேரம், வேளச்சேரியில் இருந்து தரமணிக்கு ஐ.டி., ஊழியர்களை அழைத்து சென்ற கார், லாரி மீது மோதியது.இதில், காரின் முன்பகுதி சேதமடைந்து ஓட்டுநர் இருசப்பன், 24, காயமடைந்தார். சக வாகன ஓட்டிகள், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாயிலாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், லாரி ஓட்டுநர் மணிகண்டன், 35, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ