டீ கடையில் குட்கா விற்ற முதியவர் கைது
அயனாவரம்,:அயனாவரம், அம்பேத்கர் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் பூவனலிங்கம், 62. இவர், அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், இந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அக்கடையில் அயனாவரம் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை போதை பொருட்கள், 2.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பூவனலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.