மேலும் செய்திகள்
ரயில் மோதி பலி
28-Jan-2025
திருவொற்றியூர், பிதிருவொற்றியூர், ஜோதி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 72. இவர், நேற்று காலை, பூம்புகார் நகர் - அம்பேத்கர் நகர் இடையே, ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே சென்ற மின்சார ரயில், பக்கவாட்டில் உரசியதில் அவருடைய வலது கையில் மூன்று விரல்கள் துண்டாகின.மேலும், முகத்தின் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Jan-2025