உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 9 கிலோ தங்கத்துடன் ஊழியர்கள் மாயம்

9 கிலோ தங்கத்துடன் ஊழியர்கள் மாயம்

யானைகவுனி:சவுகார்பேட்டை, பெரியநாயக்கன் தெருவில், நகை பட்டறைகளில் இருந்து, பழைய தங்க நகைகளை பெற்றுக் கொண்டு, புதிய தங்க நகைகள் வழங்கும் நகைக்கடை உள்ளது. இந்த கடையில், அதே பகுதியைச் சேர்ந்த தீரேந்திரசிங், 24, ஜாகிதர்சிங், 24, ஆகிய இருவர் வேலை பார்த்து வந்து உள்ளனர். இவர்கள், சவுகார்பேட்டை, சூளை பகுதிகளில் உள்ள நகைப்பட்டறைகள், நகை கடைகளில், 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாயை, நேற்று முன்தினம் பெற்றுள்ளனர். இதற்கிடையில், பழைய தங்க நகைகளை பெற்று சென்றவர்கள், புதிய தங்க நகைகளை வழங்காததால், சந்தேகமடைந்த வியாபாரிகள், சம்பந்தப்பட்ட நகைக்கடையை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.அப்போது தான், தீரேந்திரசிங், ஜாகிதர்சிங் ஆகியோர், தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக, யானைகவுனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை