உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடி --- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

ஆவடி --- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

ஆவடிஆவடி --- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 49 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பாதசாரிகள் நடப்பதற்காக 'டைல்ஸ்' கற்கள் ஒட்டப்பட்டுள்ளன.இந்நிலையில், ஆவடி ஜெ.பி., எஸ்டேட் முதல் பருத்திப்பட்டு வரை, 4.5 கி.மீ., துாரத்திற்கு, 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள், நடைபாதையை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர்.இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டது. வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.இதுகுறித்து ஆவடி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு, பல புகார்கள் சென்றன.இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆவடி போலீசார் உதவியுடன், சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த, 75க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் கூரைகளை,'பொக்லைன்' இயந்திரம் உதவியுடன் நேற்று அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sangeeth rajan
ஜூலை 21, 2024 09:03

அதே போல சாலைகளில் மாடுகள் கூட்டமாக ஆங்காங்கே இருகின்றன இதனால் விபத்துகள் ஏற்படுகிறது அவைகளை வளர்க்கும் உரிமையாளர் கைது நடவடிக்கை கடுமையக்காவும்


Rajarajan V
ஜூலை 20, 2024 22:56

குட் job


P.M Mohankumar
ஜூலை 20, 2024 19:23

திருமங்கலம் டு அம்பத்தூர் பெடெஸ்டின் பாதை


Ibrahim Ali A
ஜூலை 20, 2024 13:01

இதேபோல் அனைத்து பகுதிகளும் செய்து கொண்டிருக்க வேண்டும் ஆவடி மாநகராட்சிக்கு நன்றி


Ibrahim Ali A
ஜூலை 20, 2024 13:01

இதேபோல் அனைத்து பகுதிகளும் செய்து கொண்டிருக்க வேண்டும் ஆவடி மாநகராட்சிக்கு நன்றி


Pr.Kingsly
ஜூலை 20, 2024 12:48

இதே செயல் திருநின்றவூரில் செய்யுங்கள்


Ayyavu K
ஜூலை 20, 2024 10:52

Arumaiyana seyal.lppoluthu road freyaga ullathu. Ithai nirantharamaga kadaipidikkavum. Managarachikku vazhthukkal.


Abdul Razak
ஜூலை 20, 2024 09:51

பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலையில் கரையான் சாவடி சிக்னல் பகுதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஆய்வு செய்துவும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை