உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சென்னை, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீஹார் மாநிலம் தானாபூர் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளன. தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு புதன்கிழமைகளில் செல்லும் வாராந்திர ரயில், வரும் 11ம் தேதியிலும், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு- தானாபூர் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர ரயில் வரும் 13ம் தேதியிலும் நீட்டித்து இயக்கப்படும்.ஞாயிறு, திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், வரும் 15ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். செவ்வாய், புதன்கிழமைகளில் இயக்கப்படும் எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் சிறப்பு ரயில், வரும் 17ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இதை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை