| ADDED : மே 31, 2024 01:06 AM
நீலாங்கரை, சென்னை, நீலாங்கரையை சேர்ந்தவர் ரமேஷ், 43. அதே பகுதியில் உள்ள உணவகத்தின் பரோட்டா மாஸ்டர். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, சிவன் கோவில் தெருவில் உள்ள உறவினர் உஷா என்பவரை பார்க்க சென்றார்.அப்போது, உஷாவிற்கும் அவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் அல்லிமுத்து, 48, அவரது மகன் ராகுல் ஆகியோருக்கும், வாய் தகராறு நடந்து கொண்டிருந்தது. அப்போது குடும்பப் பிரச்னை தொடர்பாக மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த படியே நுழைந்த ரமேஷ், 'வம்பு செய்றவனை செருப்பை கழற்றி அடி' என கூறியபடி, வீட்டிற்குள் நுழைந்தார். தங்களை கூறுவதாக என நினைத்த ராகுல், வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வந்து ரமேசை சரமாரியாக குத்தினார். ரமேஷ் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அல்லிமுத்துவும், ராகுலும் தப்பியோடினர்.ரமேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த, நீலாங்கரை போலீசார், தலைமறைவான அல்லிமுத்து, ராகுல் ஆகியோரை தேடி வருகின்றனர்.