உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தரைப்பாலம் அடைத்து நீரோட்டம் தடை ஒட்டியம்பாக்கத்திற்கு வெள்ள அபாயம்

தரைப்பாலம் அடைத்து நீரோட்டம் தடை ஒட்டியம்பாக்கத்திற்கு வெள்ள அபாயம்

ஒட்டியம்பாக்கம், பெருங்களத்தூர் ஏரி உபரி நீர், அகரம்தென், மதுரபாக்கம் வழியாக ஒட்டியம்பாக்கம் ஓடையில் கலந்து, பெரும்பாக்கம் ஏரிக்கு சென்று, இறுதியாக பகிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது.ஒட்டியம்பாக்கம் ஓடையில், இரு தரைப்பாலங்கள் அமைந்துள்ளன. இப்பாலங்கள், பத்து குழாய்கள் அமைத்து, அதன் மீது அமைக்கப்பட்டுள்ளன.இதில், களத்துமேட்டு தெருவில் அமைந்துள்ள பாலம், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இப்பாலம், சேதமடைந்துள்ளதால், அதை கடக்க அப்பகுதிவாசிகள் அச்சமடைகின்றனர்.தவிர, மழைக்காலத்தில் பாலத்தின் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகின்றது.எனவே, இப்பாலத்தை அகற்றி, புதிய மேம்பாலம் அமைத்தால் தான், வெள்ள நீர் ஊருக்குள் செல்வது தடுக்கப்படும்.அதேபோல், தீரன் சின்ன மலை தெருவில் அமைந்துள்ள தரைப்பாலம், கலெக்டரிடம் மனு கொடுத்து, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.இப்பாலம் தற்போது பயன்பாட்டில் இல்லாததால், பராமரிப்பின்றி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இப்பாலம் தான் வெள்ள நீர் ஊருக்குள் புக, முக்கிய காரணியாக உள்ளது.கடந்த 2024ல், மழைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், பயன்பாடில்லாத பாலத்தை அகற்றி, சேதமடைந்த மற்றொரு பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ