மேலும் செய்திகள்
மோசமான வானிலையால் மொரீஷியஸ் விமானம் ரத்து
02-Mar-2025
சென்னை:ஜெர்மன் நாட்டில் உள்ள பிராங்க்பார்ட் நகரில் புறப்படும் லுப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானம், சென்னைக்கு தினமும் நள்ளிரவு 12:00 மணிக்கு வந்துவிட்டு, அதிகாலை 1:50 மணிக்கு, பிராங்க்பார்ட் நகருக்கு புறப்பட்டு செல்லும்.ஜெர்மனுக்கு செல்லும் பயணியர் மட்டுமின்றி, மற்ற நாடுகளைச் சேர்ந்தோருக்கும் இணைப்பு விமானமாக இருப்பதால், இந்த விமானத்திற்கு பயணியரிடம் பலத்த வரவேற்பு உள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, பிராங்க்பார்டில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானமும், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து பிராங்க்பார்ட் செல்ல வேண்டிய இரண்டு விமானமும், ரத்து செய்யப்பட்டது. இதனால் 300க்கும் மேற்பட்ட பயணியர், பெரிதும் பாதிக்கப்பட்டனர்.லுப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், ஊதிய உயர்வு, பணிச்சுமையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜெர்மனியில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.இதன் காரணமாக, பிராங்க்பார்ட் - சென்னை இருவழி மார்க்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
02-Mar-2025