உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குப்பை குவிப்பதால் சீர்கேடு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குப்பை குவிப்பதால் சீர்கேடு

பூந்தமல்லி:பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கொட்டப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பூந்தமல்லி - -மவுன்ட் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக, குமணன்சாவடி - -வேலப்பன்சாவடி சாலை உள்ளது.இந்த சாலையோரம், பூந்தமல்லி அரசு கருவூலம் அருகே சென்னீர்குப்பம் மற்றும் காட்டுப்பாக்கம் ஊராட்சி எல்லை உள்ளது. இப்பகுதியில் இறைச்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் தினமும் அத்துமீறி கொட்டப்படுகின்றன.இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையில் உள்ள உணவுப் பொருட்களை தேடி வரும் நாய், பன்றி, மாடு உள்ளிட்டவை, சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை