உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடையாளம்பட்டு எல்லையில் மலை போல குவியும் குப்பை

அடையாளம்பட்டு எல்லையில் மலை போல குவியும் குப்பை

நொளம்பூர், அடையாளம்பட்டு ஊராட்சி நொளம்பூர் பகுதியில் குவியும் குப்பையால் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.நொளம்பூர் சர்வீஸ் சாலையில், அடையாளம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மலை போல் குப்பை குவிக்கப்பட்டு வந்தன. மர்ம நபர்கள் அந்த குப்பையை எரிப்பதால், அப்பகுதியினர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த 2022ம் ஆண்டு செய்தி வெளியானது. இதையடுத்து, குப்பை அகற்றப்பட்டது.தற்போது, அடையாளம்பட்டு ஊராட்சிக்கு மற்றும் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட நொளம்பூர் குருசாமி சாலையில், அடையாளம்பட்டு ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதில், பிளாஸ்டிக் குப்பை அதிகம் உள்ளதால், அவை காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள குப்பையை அகற்றுவதுடன், ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை முறையாக கையாள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி