உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மடிப்பாக்கம், கீழ்கட்ட ளையில் அரசு பஸ் வழித்தடம் மாற்றம்

மடிப்பாக்கம், கீழ்கட்ட ளையில் அரசு பஸ் வழித்தடம் மாற்றம்

சென்னை, மெட்ரோ ரயில் பணி காரணமாக, மேடவாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் உள்ளிட்ட வழித்தடத்தில், நேற்றில் இருந்து அரசு பேருந்துகள் மாற்றி இயக்கப்படுகின்றன.இப்பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால், கீழ்கட்டளையில் இருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட அரசு பேருந்து தடம் எண்: 18டி, 18பி, எம்1, 45 ஏ, சி, டி, மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கைவேலி வழியாக இயக்கப்படுகிறது.மேடவாக்கம் கூட்டுசாலையில் இருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ., காலனிக்கு இயக்கப்பட்ட தடம் எண்: 14எம் பேருந்து, மேடவாக்கம் கூட்டுசாலையில் இருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக கிண்டி ரயில் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது.மேடவாக்கம் கூட்டுசாலையில் இருந்து கீழ்கட்டளை, மடிப்பாக்கம் கூட்டுசாலை, வாணுவம்பேட்டை வழியாக என்.ஜி.ஓ., காலனி பேருந்து நிலையத்திற்கு, தடம் எண்: 14எம் வழித்தடத்திலேயே 25 சாதாரண கட்டண சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.கீழ்கட்டளை பேருந்து நிலையத்தில் இருந்து, மடிப்பாக்கம் கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு, தடம் எண்: எம்1ல் ஐந்து சாதாரண கட்டண சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.அதேபோல் தடம் எண்: 76, 76பி, வி51, வி51எக்ஸ் ஆகிய வழித்தட பேருந்துகள், மேடவாக்கம் கூட்டுசாலை, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்படுகின்றன.கீழ்கட்டளையில் இருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லுார், ஆலந்துார் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட எம்18சி, 18என், என்45பி வழித்தட பேருந்துகள், மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நங்கநல்லுார், ஆலந்துார் மெட்ரோ வழியாக இயக்கப்படுவதாக, எம்.டி.சி., அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ