மேலும் செய்திகள்
தரமணியில் 2 நாள் கண்காட்சி
28-Feb-2025
சென்னை:இந்திய கைவினை கவுன்சில் சார்பில், 'தறி' எனும் ஜவுளி விற்பனை கண்காட்சி, வரும் 7, 8ம் தேதிகளில், கதீட்ரல் சாலையில் உள்ள சோழா ஹோட்டலில் நடக்கிறது.காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கும் இந்த விற்பனை கண்காட்சியில், பல மாநிலங்களில் இருந்து, 30க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பங்கேற்கின்றனர்.இதில், அஹிம்சா பட்டு, நீலாம்பரி, ஜம்தானி, அர்ஜக், இல்கல், ஷிபோரி, சந்தரி, பாந்தினி, பனாரஸ், படன் படோலா, இகாட், ரிவைவல், சிக்கன்காரி எம்பிராய்டரி, புஜோடி, பைதானி, ஹாண்ட் பிளாக் பிரின்டெட் உள்ளிட்ட சேலை வகைகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படும்.நாட்டின் சிறந்த கைவினைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களால், தறிகள் வாயிலாக தயாரிக்கப்பட்ட பிரத்யேக சேலை மற்றும் துப்பட்டா போன்றவை, விற்பனைக்கு வருகின்றன. இதில், இயற்கை வர்ணம் பூசப்பட்ட, தனித்துவமான மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை வண்ணங்களில், சேலை வகைகள் இடம் பெறுகின்றன.
28-Feb-2025