உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூலிகை அழகு சாதன பொருள் பயிற்சி

மூலிகை அழகு சாதன பொருள் பயிற்சி

சென்னை, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், மூலிகை அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி, வரும் 28ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்கின்றன.இந்த பயிற்சியானது, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது. சுயமாக தொழில் துவங்க, இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 86681 02600, 70101 43022 ஆகிய எண்களிலும் www.editn.inஎன்ற வலைதளத்தின் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.மேலும், வேலை நாட்களில் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ., அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல் என்ற முகவரியிலும் சென்று அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை