உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐஸ் வியாபாரி கார் மோதி பலி

ஐஸ் வியாபாரி கார் மோதி பலி

சென்னை:ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 50; அயனாவரத்தில் வாடகை வீட்டில் தங்கி, மெரினாவில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, மெரினா காமராஜர் சாலையில் உள்ள அரசு தடவியல் ஆய்வு கூடம் அருகே, சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார், அவர் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டார்.பலத்த காயமடைந்த வியாபாரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சிவானந்தம், 25, என்பவரை கைது செய்ததுடன் காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை