உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரோபோடிக் கற்றல் மையம் சி.ஐ.டி., கல்லுாரியில் துவக்கம்

ரோபோடிக் கற்றல் மையம் சி.ஐ.டி., கல்லுாரியில் துவக்கம்

 குன்றத்துார்,சென்னை, குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியும், குகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ரோபோடிங் கற்றல் மற்றும் பயிற்சி மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக குகா மையத்தின் முதன்மை மண்டல அதிகாரி ஆலன் பேம், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். குகா நிறுவனத்தின் மேலாளர் ராகவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஸ்ரீராம் கூறியதாவது:தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் வருகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகளில், ரோபோடிக் தொழிற்நுட்பம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, ரோபோடிக் தொழில் நுட்பத்தில் செயல்திறன் மிக்க பொறியாளர்களை தமிழகத்தில் உருவாக்க, இந்த மையத்தை துவக்கி உள்ளோம். இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோபோடிக் பயிற்சி மையமாக இது துவக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை பொறியாளர்களும் இங்கு பயிற்சி பெறலாம். ஆண்டுதோறும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் இங்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ