உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மஹிந்திரா சிட்டியில் இந்தியன் ஹோட்டல்ஸ்

மஹிந்திரா சிட்டியில் இந்தியன் ஹோட்டல்ஸ்

சென்னை, நாட்டின் மிகப்பெரிய விருந்தோம்பல் நிறுவனமான ஐ.எச்.சி.எல்., எனும் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம், சென்னை மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில், 'விவாந்தா' மற்றும், 'ஜிஞ்சர்' என, இரு புதிய ஹோட்டல்களை துவக்க உள்ளது.இந்த ஹோட்டல்கள், கொளவாய் ஏரிக்கு அருகே 3 ஏக்கரில் பசுமை முறையில் கட்டப்பட உள்ளன.விவாந்தாவில் 100 அறைகளும், ஜிஞ்சர் ஹோட்டலில் 200 அறைகளும் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.இதுகுறித்து, ஐ.எச்.சி.எல்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புனீத் சத்வால் கூறியதாவது:சென்னையில், நிறுவனத்தின் செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் விவாந்தா, ஜிஞ்சர் ஹோட்டல்கள், மாபெரும் வணிக நகரின் பல தேவைகளையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஆஸ்ப்ரி எனர்ஜியின் நிறுவனர் ஜி.பி.சுபாஷ் கூறுகையில், ''மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் விவாந்தா, ஜிஞ்சர் பிராண்டுகளை கொண்டு வர, ஐ.ஹெ.சி.எல்., உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ