உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உள்வாங்கிய சாலை: போரூரில் அச்சம்

உள்வாங்கிய சாலை: போரூரில் அச்சம்

போரூர், போரூர், மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை உள்வாங்கியுள்ளதால், விபத்துகள் ஏற்படும் முன் சீர் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பூந்தமல்லி, போரூர் கிண்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும், லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இச்சாலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போரூர் மேம்பாலம் அருகே, மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை உள்வாங்கி உள்ளது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தடுமாறி விழும் நிலை உள்ளது. 'மெகா' பள்ளம் ஏற்படும் முன், சாலையின் உள்வாங்கிய பகுதியை சீர் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை