உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் பணியாளர் தீக்குளிப்பு அலுவலக அதிகாரியிடம் விசாரணை

பெண் பணியாளர் தீக்குளிப்பு அலுவலக அதிகாரியிடம் விசாரணை

சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுமதி, 38. கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, 10 ஆண்டுகளாக மகள், மகனுடன் வசிக்கிறார்.தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில், 10 மாதங்களாக துாய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.சில தினங்களுக்கு முன், திடீரென நிறுவனத்தின் மனிதவள மேலாளர், 'துாய்மை பணிக்கு ஆண் பணியாளர் தான் வேண்டும்; நீங்கள் வேண்டாம்' எனக்கூறி வேலையை விட்டு நிறுத்தி உள்ளார். மேலும், சம்பளத்தை 7ம் தேதி வந்து வாங்கிச் செல்லுமாறும் கூறியுள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அலுவலகத்திற்கு சென்ற சுமதி, மகனின் படிப்பு மற்றும் வீட்டு செலவிற்காக சம்பள பணத்தை, உடனடியாக தரும்படி கேட்டுள்ளார்.இதற்கு, நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுமதி, கேனில் எடுத்து வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார்.அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மனிதவள மேலாளரிடம் விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, எழும்பூர், 14வது நீதிபதி தயாளன் நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமதியிடம் மரண வாக்குமூலம் பெற்றார்.அதில், 'தான் வேலை செய்து வந்த நிறுவனத்தின் மனிதவள மேலாளர், அடிக்கடி குறை கூறியபடி இருந்தார். தன்னை எப்படியாவது வேலையை விட்டு நீக்க வேண்டும் என திட்டம் தீட்டியே, என்னை நிறுத்திவிட்டார்' எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி