சென்னை:கோயம்பேடு சந்தையில், வாழை சம்பந்தப்பட்ட கழிவுகளை சேகரித்து, பயனுள்ள பொருள் தயாரிக்க, தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, முன்மொழிவு வரவேற்கப்படுகிறது.இது தொடர்பாக, சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம் வெளியிட்ட அறிக்கை:திடக்கழிவு அகற்றுவதில், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. மூலாதாரங்களை பிரித்தல், குப்பை சேமிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லுதல், கழிவு மேலாண்மை விதிமுறைகளுக்கு இணங்குதல் போன்றவை தேவை.இந்த சவால்களை எதிர்கொள்ள, கொள்கை முடிவு, உள்கட்டமைப்பு முதலீடு, சமூக ஈடுபாடு, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும், ஒரு விரிவான யுக்தி தேவைப்படுகிறது.இவ்வழிகளில், கோயம்பேடு சந்தையில் உருவாகும், வாழை தொடர்பான கழிவுகளை சேகரித்து, பயனுள்ள பொருள் தயாரிக்கும் பணி மேற்கொள்ள, தகுதியான தனி நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து, முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமுள்ள நபர்கள்,நிறுவனங்கள், இது தொடர்பான விதிமுறைகள் மற்றும் ஆவணங்களை, www.tntenders.gov.in, http://www.cmda chennai.gov.inஇணையதளத்தில், வரும் 29ம் தேதி மாலை 3:00 மணி வரை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கோயம்பேடு சந்தை முதன்மை நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், வரும் 22ம் தேதி மாலை 3:00 மணிக்கு விளக்க அமர்வு கூட்டம் நடக்க உள்ளது.ஏதேனும் சந்தேகம் இருந்தால், வரும் 23ம் தேதி மாலை 3:00 மணிக்குள், gmail.comஎன்ற முகவரிக்கு 'இ - மெயில்' வழியாக அல்லது நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அணுகலாம். விருப்ப வெளிப்பாட்டை சமர்ப்பிக்க, வரும் 30ம் தேதி கடைசி நாள்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.