மேலும் செய்திகள்
தாம்பரம் - வண்டலுார் பாதை இன்று திறப்பு
01-Aug-2024
பெருங்களத்துார், சென்னை- ---- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், 234 கோடி ரூபாய் செலவில், மாநில நெடுஞ்சாலை- ரயில்வே நிர்வாகம் இணைந்து, மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், முதல் கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார்- - தாம்பரம் மார்க்கமான பாதையும், அதைதொடர்ந்து, புது பெருங்களத்துார், சீனிவாசா நகர் வழியாக இறங்கும் பாதையும் திறக்கப்பட்டன. கடந்த மாதம், ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் மார்க்கமான பாதை திறக்கப்பட்டது. அடுத்ததாக, நெடுங்குன்றம் சாலை மார்க்கமான பாதை பணியை முடிக்கவேண்டும். இந்த நிலையில், நெடுங்குன்றம் சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், மேம்பாலத்தில் ஏறுவதற்கும், ஜி.எஸ்.டி., சாலையில் தாம்பரம் மார்க்கமாக செல்வதற்கும், நீண்ட துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. சில நேரங்களில், எதிர்திசையிலும் செல்கின்றனர்.இதனால், நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன. அதனால், தற்காலிக நடவடிக்கையாக, நெடுங்குன்றம் சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள், சாலையை கடந்து தாம்பரம் செல்ல வசதியாக, மீடியனை உடைத்து பாதை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இந்த பாதை திறக்கப்படும் என்றும், இது தற்காலிகமானது என்றும், நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
01-Aug-2024