உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொலைவெறி தாக்குதல் 11 பேருக்கு குண்டாஸ்

கொலைவெறி தாக்குதல் 11 பேருக்கு குண்டாஸ்

ஆவடி, திருவள்ளூர் மாவட்டம் பணம்பாக்கம் செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் தீனதயாளன், 30, லட்சுமி,27, தம்பதியர். தீனதயாளன் பட்டரைவாக்கத்தில், பிளாஸ்டிக் கிடங்கில் பணிபுரிந்து வந்தார்.முன்விரோதம் காரணமாக, கடந்த ஜூன் 1ம் தேதி, கொரட்டூர் கருக்கு மேம்பாலம் அருகே, ஐந்து பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டார்.திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தீனதயாளன், மேல் சிகிச்சைக்காக பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி, ஜூன் 5ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த கொரட்டூர் போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய 11 பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள கொரட்டூர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த பிரதீஸ்,27, குமார்,22, கருக்கு தனலட்சுமி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 27, மேனாம்பேடு சபரி அய்யப்பன் நகரைச் சேர்ந்த யுவராஜ்,23, உட்பட 11 பேர் மீது, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்படி, நேற்று முன்தினம் குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ