உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரி, முடிச்சூர் ஏரி சீரமைப்பு டெண்டர் நடவடிக்கை துவக்கம்

வேளச்சேரி, முடிச்சூர் ஏரி சீரமைப்பு டெண்டர் நடவடிக்கை துவக்கம்

சென்னை, வேளச்சேரி, முடிச்சூர், அயனம்பாக்கம் ஏரிகளின் முகப்பு சீரமைப்பு பணிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது. 'சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 ஏரிகளை சீரமைத்து, அவற்றின் முகப்பு பகுதிகள் மேம்படுத்தப்படும்' என, சி.எம்.டி.ஏ., அறிவித்தது. இதற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், நீர்வளத்துறையின் அனுமதியுடன் ஏரிகளை சீரமைப்பதற்கான வரைவு திட்டங்கள், வடிவமைப்புகள் ஆகியவை, தனியார் நிறுவனங்கள் வாயிலாக தயாரிக்கப்பட்டன. ஏரிகளின் கரையோர பகுதிகளை பலப்படுத்தி, பொது மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் இடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் கரையை ஒட்டிய பகுதிகளில், அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு பொழுது போக்கு வசதிகளையும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானம் விரைவில் துவங்க உள்ளது. இந்த மேம்பாட்டு பணிகளுக்கான கட்டுமான ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் அறிவிப்புகளை, சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது. 'அடுத்த மாத இறுதிக்குள் ஒப்பந்ததாரர் தேர்வு முடிக்கப்படும்' என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்