எலுமிச்சை பழம் கிலோ ரூ.100
சென்னை:கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், தேவை அதிகரித்துள்ளதால், எலுமிச்சம் பழங்களின் விலை திடீரென்று உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில், பிப்ரவரியில், கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட எலுமிச்சை, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.கத்தரி வெயில் துவங்கும் நேரத்தில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் கூறினர்.