உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாட்டரி விற்றவர் சிக்கினார்

லாட்டரி விற்றவர் சிக்கினார்

திருவான்மியூர், திருவான்மியூர், தெற்கு அவென்யூ பகுதியில், வெளி மாநில லாட்டரி சீட்டுகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, அதன் எண்களை துண்டு சீட்டில் எழுதி கொடுப்பதாக, திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தீவிர விசாரணையில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த கோபால், 57, என்பவர், சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பது தெரிந்தது.நேற்று, கோபாலை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி