உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது

ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது

அரக்கோணம், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பெருமாள் நகரைச் சேர்ந்தவர் அபிராமி, 41. இவர், கடந்த 12ம் தேதி இரவு கணவர் மற்றும் குழந்தைகளுடன், ஆவடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறநகர் ரயிலில் சென்றார்.அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன், சிக்னலுக்காக நின்றது. அப்போது, 35 வயது நபர், அபிராமியின் 7 சவரன் செயினை பறித்து, ரயிலில் இருந்து குதித்து தப்பினார்.அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அரக்கோணம் ரயில் நிலையத்தில், சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம், நேரு நகரைச் சேர்ந்த நாகராஜ், 35, என்பதும் ரயிலில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து 11 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ