உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் இருந்து விழுந்தவர் கஞ்சா கடத்தியது அம்பலம்

ரயிலில் இருந்து விழுந்தவர் கஞ்சா கடத்தியது அம்பலம்

சென்னை, சென்னை அருகே, ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடி வரும் ஒடிசா வாலிபர், கஞ்சா கடத்தியது தெரிய வந்துள்ளது.ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் உமாகாந்த், 44. இவர், ஆக., 12ல், ரயிலில் சென்னைக்கு வந்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு அருகே, ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடினார்.போலீசார் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த நிலையில், செவிலியர்கள் உதவியுடன் உமாகாந்த் உடைமைகளை, போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது அவர், 3 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ