உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருடனை டிராக் செய்து மொபைல் போன் மீட்பு

திருடனை டிராக் செய்து மொபைல் போன் மீட்பு

செம்மஞ்சேரி:சோழிங்கநல்லுார், வில்லேஜ் சாலையைச் சேர்ந்தவர் சரவணகுமார், 42; ஆட்டோ ஓட்டுனர். நேற்று அதிகாலை, சவாரி இல்லாததால் ஆட்டோவில் உறங்கினார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர், சரவணகுமார் சட்டைப்பையில் இருந்த மொபைல் போனை எடுத்தார். சரவணகுமார் சுதாரிப்பதற்குள், மர்ம நபர் மொபைல் போனுடன் தப்பினார்.இதையடுத்து சரவணகுமார், மற்றொரு வாகன ஓட்டியின் மொபைல் போனில் இருந்து தனது மொபைல் போனை டிராக் செய்தார். மர்மநபரை பின் தொடர்ந்து, ஓ.எம்.ஆர்., ஒக்கியம்பேட்டை 'பங்க்' அருகில் மடக்கிப் பிடித்து, செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், மொபைல் போனை திருடியவர் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 24, என தெரிந்தது. அவரை கைது செய்து, மொபைல் போன் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ