உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழல் சிறையில் மொபைல் போன் பறிமுதல்

புழல் சிறையில் மொபைல் போன் பறிமுதல்

புழல்:புழல் சிறையில் கைதி யிடம் சோதனை செய்த போது மொபைல் போனை பறிமுதல் போலீசார் செய்தனர்.சென்னை புழல் சிறையில், 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் தடைசெய்யப்பட்டுள்ள மொபைல் போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. சிறை காவலர்கள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் சிறை காவலர்கள், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கார்த்திக், 33, என்ற இளைஞரை சோதனை செய்த போது, லுங்கியால் இடுப்பில் மறைத்து வைத்திருந்த மொபைல்போன் மற்றும் அவர் தங்கியிருந்த அறையின் கழிப்பறையில் இருந்து 'சார்ஜர்' பறிமுதல் செய்யப்பட்டது. புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ