மேலும் செய்திகள்
பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தல்
20-Feb-2025
சென்னை, தமிழகத்தில் தொடரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்தக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், நேற்று எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க பொதுச் செயலர் ராதிகா தலைமை வகித்தார். பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை அமர்வை கூட்ட வேண்டும். பெண்களை பாதுகாக்கின்ற சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். ஜாதி ஆவணப் படுகொலைகளை தடுத்திட சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில், பாலின சமத்துவத்தை வலியுறுத்து கின்ற பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
20-Feb-2025