| ADDED : ஜூலை 04, 2024 12:23 AM
தாம்பரம், தாம்பரத்தில், புறவழிச் சாலையை கடந்து, தாம்பரம் -- கிஷ்கிந்தா சாலை செல்கிறது. வெளிவட்ட சாலைக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் கிஷ்கிந்தா, சோமங்கலம் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் என, தினமும் ஏராளமான வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன. இதில், கன்னடப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் இல்லாததால், பீக் ஹவர்' நேரத்தில், வாகனங்கள் இஷ்டத்திற்கு திரும்புகின்றன.லாரி ஓட்டுனர்கள், எதை பற்றியும் கவலைப்படாமல், அதிவேகமாக சென்று திரும்புவதால், மற்ற வாகனங்களில் வருவோர் திக்குமுக்காடுகின்றனர். இதனால் நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.மேலும், லாரிகள் அதிகளவில் சென்று வருவதால், குறிப்பிட்ட சில மீட்டர் துாரத்திற்கு குண்டும், குழியுமாக மாறி, பயன்படுத்த முடியாத நிலைமைக்கு மாறிவிட்டது.அப்படியிருந்தும் அந்த இடத்தில் லாரிகள் வேகமாக செல்வதால், துாசி பறந்து வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், புறவழி - கிஷ்கிந்தா சந்திப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.