உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.டி.சி., டிக்கெட் கருவி க்யூ.ஆர்., வசதி இழுத்தடிப்பு

எம்.டி.சி., டிக்கெட் கருவி க்யூ.ஆர்., வசதி இழுத்தடிப்பு

சென்னை,எம்.டி.சி., எனும் மாநகர போக்குவரத்து கழகத்தில் பயணியருக்கு டிக்கெட் வழங்க, புது மின்னணு டிக்கெட் கருவி, பிப்., 28ம் தேதி வழங்கப்பட்டது. 90 சதவீத பேருந்துகளில் புதிய கருவி வாயிலாக டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.டெபிட், கிரெடிட் கார்டுகள், க்யூ.ஆர்., கோடு, ஜிபே வாயிலாக டிக்கெட் வசதி இருக்கிறது. ஆனால், இந்த வசதி இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை.பயணியர் கூறுகையில், 'இதே டிக்கெட் கருவிகளை கொண்டு வெளியூர் விரைவு பஸ்களில் க்யூ.ஆர்., கோடு, ஜிபே வாயிலாக டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆனால், மாநகர போக்குவரத்து கழகத்தில் இந்த வசதி இல்லை' என்றனர்.எம்.டி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'குறுகிய நேரத்தில் அடுத்தடுத்து நிறுத்தங்கள் இருப்பதால், மாநகர பேருந்தில் இந்த வசதி கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. தற்போது ஆய்வில் உள்ளது. விரைவில் செயலுக்கு வரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை