உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மர்ம பொருள் வெடித்து பள்ளி மாணவர் பலி

மர்ம பொருள் வெடித்து பள்ளி மாணவர் பலி

கொளத்துார், கொளத்துார், ஜி.கே.எம்., காலனி அருகே முருகன் நகரை சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது மகன் ஆதித்ய பிரணவ்,17. பிளஸ் 2 மாணவர். வீட்டில் அறிவியல் ஆராய்ச்சி முயற்சிகளில் மாணவர் ஈடுபட்டு வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் இவர் ரசாயனங்கள் பயன்படுத்தியதில், கடும் புகை ஏற்பட்டுள்ளது. நேற்றும் இதே முயற்சியில் அவர் ஈடுபட்ட போது, பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. சம்பவ இடத்திலேயே மாணவர் உடல் சிதறி பலியானார். இச்சம்பவத்தால் வீட்டின் பக்கவாட்டு சுவர், மேற்கூரை இடிந்து விழுந்தது. பக்கத்தில் உள்ள நான்கு வீடுகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மாணவனின் தந்தை வீட்டிலேயே பேட்டரி பொருட்களை வைத்து சர்வீஸ் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி