உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ ரயில் கதவுகளில் துணி, பைகள் சிக்குவதை தடுக்க புதிய தொழில்நுட்பம்

மெட்ரோ ரயில் கதவுகளில் துணி, பைகள் சிக்குவதை தடுக்க புதிய தொழில்நுட்பம்

சென்னை :'மெட்ரோ ரயில் கதவுகளில் துணிகள், பைகள் சிக்கிக் கொள்வதை தடுக்கும் வகையில், புதிய தொழில்நுட்பம் கொண்டு வரப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் கதவு சென்சார்கள் குறைந்தபட்சம், 10 மி.மீ., தடிமனாக இருந்தால் மட்டுமே தடைகளைக் கண்டறியும். இருப்பினும், பெரும்பாலான ஆடைகள் மற்றும் பை பட்டைகள், 0.3 மி.மீ., தடிமனுக்கும் குறைவாக இருப்பதால், அவற்றைக் கண்டறிய முடியாது. குறிப்பாக, பயணியரின் ஆடைகள், பொருட்கள் சிக்கிக் கொண்டால், பாதுகாப்பு பணியாளர்கள், பயணியர் அவசர பொத்தானை அழுத்த வேண்டும். எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில், அனைத்து மெட்ரோ ரயில்களிலும், 'ஆன்ட்டி டிராக் சிஸ்டம்' எனும் புதிய தொழில்நுட்பம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, 40 கோடி ரூபாய் வரை செலவாகும்.மெட்ரோ ரயில் கதவுகளுக்கு இடையே உள்ள ரப்பர் மணிகள் மாற்றப்பட்டு, இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட சென்சார் அமைப்பு நிறுவப்படும். இது, மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கிய பொருளில் இருந்து, குறைந்தபட்ச சக்தியைக்கூட கண்டறியும். மேலும், இது ஒரு பயணி இழுக்கும்முன் அவசரகால பிரேக்குகள் செயல்படுவதை உறுதி செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை