பெண் போலீசாருக்கு தங்கும் விடுதி திறப்பு
சென்னை:புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், பெண் காவலர்களுக்கான தங்கும் விடுதி சேதமடைந்து காணப்பட்டது. இந்த விடுதி 36.64 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.விடுதியில், 30 சாதாரண அறைகளும், 30 குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகளும், 22 குளியல் அறைகள் மற்றும் 25 ஒப்பனை அறைகள் கட்டப்பட்டு உள்ளன; பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.இவ்விடுதியை, சென்னைக்கு பணியிட மாறுதலில் வரும் பெண் காவலர்கள் அதிகபட்சமாக, 45 நாட்கள் வரையில் தங்குவதற்கு பயன்படுத்தலாம்.சீரமைக்கப்பட்ட விடுதியை, 'பூ வையர் புத்துணர்ச்சி சிற்றில்' என, பெயர் சூட்டி, கமிஷனர் அருண் திறந்து வைத்துள்ளார்.