உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சதுப்பு நிலத்தில் தீ விபத்து அறிக்கை வழங்க உத்தரவு

சதுப்பு நிலத்தில் தீ விபத்து அறிக்கை வழங்க உத்தரவு

சென்னை, சோழிங்கநல்லுார் - மேடவாக்கம் சாலையில், பெரும்பாக்கம் காப்புக்காட்டின் ஒரு பகுதியாக உள்ள சதுப்பு நிலம், பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது.கடும் வெயில் கொளுத்திய கடந்த மே 30ம் தேதி இரவு 9:00 மணிக்கு, சதுப்பு நிலத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் பல்வேறு வகை மரங்கள், செடி, கொடிகள் தீக்கிரையாகின. வறட்சியாக இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது.தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சி.எம்.டி.ஏ., அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தீ விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை