உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு 

உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு 

சென்னை, 'சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நீர் வள துறை, நெடுஞ்சாலைகள், சென்னை மாநகராட்சி உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். தமிழகத்தில், மத்திய அரசின், 'பாரத்மாலா பரியோஜனா' திட்டத்தின் கீழ், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, 21 கி.மீ., இரண்டு அடுக்கு, நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை, 5,510 கோடி ரூபாயில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை, தமிழக அரசு, சென்னை துறைமுக ஆணையமும் தலா, 50 சதவீத பங்குடன் மேற்கொண்டு வருகின்றன. மேம்பால சாலை அமைக்கும் பணி, 2023 நவம்பரில் துவங்கியது. இந்த பணிகளின் நிலை குறித்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, சென்னையில் நேற்று, அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், அமைச்சர் வேலு பேசும்போது, ''இப்பணிக்கான ஒப்பந்த காலம் முடிய, 30 மாதங்களே உள்ளதால், குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக முடிக்க, நீர் வள துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை, சென்னை மாநகராட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை கலெக்டர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.*


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி