ஒப்பந்ததாரர் கொலை வழக்கு நெல்லை நபர்கள் கைது
அம்பத்துார், அம்பத்துார், டீச்சர்ஸ் காலனி, ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் பாபு, 38. ஒப்பந்ததாரர்.கடந்த 28ம் தேதி, அம்பத்துார் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள பேட்மிட்டன் அரங்கின் வெளியே, தினேஷ் பாபுவை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி தப்பியது.இந்த வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜவேலு, 31, அரக்கோணத்தைச் சேர்ந்த மணிகண்டன், 21, சுபீர், 21, ஆகியோர், செங்குன்றம் உதவி கமிஷனர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் இரவு சரணடைந்தனர். அம்பத்துார் போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரித்தனர்.தினேஷ் பாபுவுக்கு மாதவரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அப்பெண் வீட்டார், கடந்த வாரம் தினேஷ் பாபுவை வீடு புகுந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தான், தினேஷ் பாபு, கூலிப்படையால் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுராஜ், 43, ஒரகடத்தைச் சேர்ந்த பெருமாள், 42, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நேற்று இரவு சிறையில் அடைத்தனர். கொலைக்கு திட்டம் தீட்டிய இருவரை, போலீசார் தேடுகின்றனர்.அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின்படி, பெண் வீட்டார் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது.