உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சைதை மேம்பாலத்திற்கு பைல் பவுண்டேஷன்

சைதை மேம்பாலத்திற்கு பைல் பவுண்டேஷன்

சென்னை,:ஆலந்துார், கிண்டி பகுதியில் வடியும் மழைநீர், அரை கி.மீ., துாரத்தில் உள்ள அடையாறு ஆற்றில் சேர வேண்டும். மாறாக, நீரோட்ட பாதை இல்லாததால் வேளச்சேரி ஏரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக, 18 கி.மீ., துாரம் பயணித்து, முட்டுக்காடு செல்கிறது.இதை தடுக்க ஆலந்துார், மடுவாங்கரை பகுதியில் வடியும் மழைநீர், நேராக அடையாறு ஆறு செல்லும் வகையில், கத்திப்பாரா மேம்பாலம் மற்றும் கிண்டி ரயில்வே மேம்பாலம் இடையே, அண்ணாசாலை குறுக்கே ஐந்து இடங்களில் நீர்வழி தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பக்கவாட்டு வடிகால்களை அதற்கு ஏற்ப அகலமாக்க வேண்டி இருந்தது. இதையடுத்து, 2 கோடி ரூபாயில், 200 மீட்டர் நீளம், 6 அடி அகலம், 6 அடி ஆழத்தில், வடிகால் அமைக்கப்படுகிறது. இந்த பணியை, நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ், தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். பருவமழைக்கு முன், பணியை முடிக்க உத்தரவிட்டனர்.சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.மண் பரிசோதனை முடிந்து 'பைல் பவுண்டேஷன்' எனப்படும் அடித்தளம் அமைக்கும் பணி, துவங்க உள்ளது. அதற்கான பணி திட்டம் குறித்து கேட்டனர். மேலும், பைல் பவுண்டேஷன் போடும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, உரிய ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை