உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடை சூறை பா.ம.க.,வினர் கைது

கடை சூறை பா.ம.க.,வினர் கைது

சென்னை, ஆர்.ஏ.புரம், காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் சபரிநாதன், 29. இவர், அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் அவரது கடைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா என்பவர் பொருட்கள் வாங்கியபோது, சில்லரை கொடுப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து அந்த பெண், அவரது கணவரும் பா.ம.க., உறுப்பினருமான சண்முகவேலிடம் கூறியுள்ளார். உடனே சண்முகவேல், உறவினரான பா.ம.க., தென்சென்னை இளைஞர் அணி மாவட்ட நிர்வாகி சத்தியராஜுவுடன் சென்று கடைக்காரரை தாக்கியதுடன், கடையை யும் சூறையாடினர்.இது குறித்து விசாரித்த அபிராமபுரம் போலீசார், சண்முகவேல், சத்தியராஜ் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ