பெட்ரோலிய லாரிகளிடம் போலீசார் பணம் வசூல்
தண்டையார்பேட்டை:பெட்ரோலிய லாரிகளிடம் அடாவடியாக அபராதம் வசூலிப்பதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோரிடம், நேற்று புகார் அளிக்கப்பட்டது.சென்னை, ஆசனுார் பெட்ரோலிய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி அளித்த மனு:சென்னை பகுதிக்குள் பெட்ரோலிய லாரிகள் சென்றால், போக்குவரத்து போலீசார் அதிக கெடுபிடிகளை விதிக்கின்றனர். 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை அபராத கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், வருமானத்தின் பெரும் பகுதியை போலீசாரிடம் கொடுக்கும் நிலையே உள்ளது. குப்பை லாரிகள், குடிநீர் லாரிகளை போலவே, அத்தியாவசிய பட்டியலில் உள்ள பெட்ரோலிய லாரிகளையும் சென்னை பகுதிக்குள் செல்ல போக்குவரத்து போலீசார் அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.