உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செல்ல பூனையை தேடும் போலீசார்

செல்ல பூனையை தேடும் போலீசார்

அமைந்தகரை, அமைந்தகரை, மாங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீலேஷ், 50. இவர், சூளைமேட்டில், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். தன் வீட்டில் செல்ல பிராணிகளான நாய், பூனையை தலா ஒன்று என, ஒன்றரை ஆண்டுகளாக வளர்த்து வந்தார். திடீரென கடந்த, 17ம் தேதி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இருந்த பூனை காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்காததால், ப்ளூ கிராஸ் அமைப்பில், ஸ்ரீலேஷ் புகார் அளித்தார். காணாமல் போன பூனையை கண்டுபிடித்து தருமாறு நேற்று முன்தினம் இரவு, அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். போலீசார், பூனை வழிமாறி போனதா அல்லது மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா என்று தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி