உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 973 வாகனங்கள் பறிமுதல் 26ல் ஏலம் விடும் போலீசார்

973 வாகனங்கள் பறிமுதல் 26ல் ஏலம் விடும் போலீசார்

சென்னை, சென்னையில் சாலையோரம் கேட்பாரின்றி கிடந்தவாகனங்களை போலீசார் அகற்றி வருகின்றனர். வாகன உரிமையாளர்களிடம் தகவல் தெரிவித்தும் எடுக்காத வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.அந்த வகையில், பறிமுதல் செய்தவற்றில் எவரும் உரிமை கோராத, 953 இரு சக்கர வாகனங்கள், 11 மூன்று சக்கர வாகனங்கள், ஒன்பது நான்கு சக்கர வாகனங்கள் என, மொத்தம், 973 வாகனங்களை ஏலம் விட போலீசார் முடிவு செய்துள்ளனர்.அதன்படி, வரும், 19, 20ல், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில், காலை, 10:00 - 2:00 மணி வரை ஏலத்திற்கான முன் பதிவு செய்யப்படுகிறது. இதில், அடையாள அட்டை, ஜி.எஸ்.டி., சான்றிதழ் உள்ள ஏலதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வரும், 26ம் தேதி காலை 10:00 மணியளவில் ஏலம் விடப்படும். வாகனங்களை ஏலம் எடுத்தவர்கள், முழு தொகை, ஜி.எஸ்.டி., வரி முழுதையும் மறுநாள் செலுத்த வேண்டும் என, சென்னை மாநகர போலீசார் நேற்று அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை