| ADDED : ஏப் 15, 2024 01:17 AM
வேளச்சேரி:மாற்றுத்திறனாளிகளில், காதுகேளாதோருடன் சாதாரணமாக பேசும் மக்கள் உரையாடுவது கடினம். இதனால், இடைவெளி அதிகரிக்கிறது.இதை போக்க, டிசம்பர் 3 இயக்கம் சார்பில், வேளச்சேரியில், மூன்று நாள் இலவச சைகை மொழி பயிற்சி வழங்கப்பட்டது. இதில், இதர மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி அல்லாதோர் பங்கேற்றனர்.இது குறித்து பயிற்சி பெற்றவர்கள் கூறியதாவது: காதுகேளாதோர் சைகை மொழியில் உரையாடும்போது, அந்த மொழி புரியாமல் பதில் கூற தெரியாமல், அவர்களுடன் பழக முடியாத நிலை ஏற்பட்டது.இது ஒரு குற்ற உணர்ச்சியாகவே இருந்தது. இந்த பயிற்சி வாயிலாக, அடிப்படை சைகை மொழி கற்றுக்கொண்டோம். இனிமேல், காதுகேளாதோரை பார்க்கும்போது, அவர்களுடன் உரையாடி பழகலாம் என்ற தைரியம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.