உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பரங்கிமலை - வேளச்சேரி தண்டவாள பணி இம்மாதம் இறுதிக்குள் முடிக்க ரயில்வே திட்டம்

பரங்கிமலை - வேளச்சேரி தண்டவாள பணி இம்மாதம் இறுதிக்குள் முடிக்க ரயில்வே திட்டம்

சென்னை:கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் பணியில், மேம்பாலம் இணைப்பு பணி முடிந்து, ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க, சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது.சென்னை கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் பாதையில், தினமும் 150 சர்வீஸ்மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

2 லட்சம் பேர் பயணம்

எழும்பூர் - கடற்கரை நான்காவது பாதை பணி நடப்பதால், தற்போது சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வரையில் மட்டும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.தினமும் 2 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இதில், வேளச்சேரி - பரங்கிமலை 5 கி.மீ., துாரம் இணைக்கும் வகையில், மேம்பால ரயில் பாதை திட்டப்பணி, 2008ம் ஆண்டில் துவக்கப்பட்டது.ஆனால் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால், பல ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்டது.நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டதால், இந்த தடத்தில் 2022ம் ஆண்டிற்குப் பின் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக, பிரமாண்ட துாண்களும் அமைக்கப்பட்டன.

இரும்பு சாரம் அகற்றம்

தில்லை கங்கா நகர் உள்வட்ட சாலையில், துாண்கள் இடையே பாலம் அமைக்கும் பணி, முழு வீச்சில் நடைபெற்றது. 157 மற்றும் 158வது துாண்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டு, ஒரு பக்க இரும்பு சாரம் அகற்றப்பட்டது.அந்த மேம்பாலத்தின் பாரம் தாங்காமல், ஒரு பகுதி கடந்த ஜன., 17ம் தேதி கீழே விழுந்து, 3 அடி ஆழத்திற்கு சாலையில் புதைந்தது.இதனால் பாரம் தாங்காமல், ஒரு பக்க துாணின் தாங்கும் பகுதி உடைந்ததால், பாலம் கீழே விழுந்தது.பின்னர், சென்னை ஐ.ஐ.டி., குழுவினர், இந்த மேம்பாலத்தின் உறுதித் தன்மை மற்றும் இதர துாண்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு பரிந்துரைகளை அளித்தனர். இதையடுத்து, இரண்டு மாதங்களுக்குப் பின், பணிகள் மீண்டும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எனவே, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்து வந்த ரயில்வே இணைப்பு பணி, இந்த மாதத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்டவாளம் பணி துவக்கம்

சென்னை புறநகர் மின்சார ரயிலில், முக்கிய இணைப்பாக இருக்கும் வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் திட்டம், பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கிடப்பில் இருந்த ஆதம்பாக்கம் - பரங்கிமலை ரயில் இணைப்பு மேம்பால பணிகள் முடிந்துள்ளன. அடுத்தகட்டமாக, ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியை துவங்கி உள்ளோம். இந்த மாதம் இறுதிக்குள் இந்த பணியையும் முடித்து, ரயில் சேவையை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.- சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

panneer selvam
செப் 09, 2024 19:17

It is the rail link not metro conceived by PMK minister Velu about 17 years ago . Thanks to Dravidian Parties , the final stretch was delayed by more than 15 years in guise of land acquisition .Even now , no one is sure when the project will be commissioned . As such it may be completed in all respects by first quarter of 2025 not before .


கடுகு
செப் 09, 2024 10:48

இது நான் சின்னப்பயிலேர்ந்தே சொல்லிக்கிட்ருக்காய்ங்க!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை